எஸ்கலேட்டரை கன்வேயர் பெல்ட்டாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

0 3030
எஸ்கலேட்டரை கன்வேயர் பெல்ட்டாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

எஸ்கலேட்டரை கன்வேயர் பெல்ட்டாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவில், 2 பெண்கள் எஸ்கலேட்டரின் உச்சியில் தங்கள் சூட்கேஸ்களில் ஒன்றை எஸ்கலேட்டரில் வைக்கிறார்கள்.

ஒரு நொடியில் நகர்ந்த சூட்கேஸ் எஸ்கலேட்டர் படிகளில் ஊருண்டு ஓடுகிறது. இதை பார்த்த பெண் ஒருவர் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயல்கிறார். ஆனால், அந்த பெண்ணின் காலில் சூட்கேஸ் இடித்ததில் அவர் கீழே விழுகிறார்.

தலையில் விழுந்த பலத்த அடியினால் ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவிய நிலையில், சூட்கேஸ்யை கையில் பிடித்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்காது என பலரும் தெரிவிக்கின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments