டாஸ்மாக்கில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக இருதரப்பினர் மோதல்

0 1878
டாஸ்மாக்கில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக இருதரப்பினர் மோதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே டாஸ்மாக்கில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக இருதரப்பினர் மோதிக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூதாமூர் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திக்கொண்டிருந்த ஒருவரின் செல்போன் காணாமல் போனதாக அங்கிருந்த சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது, இருதரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக உருட்டுக்கட்டைகளால் தாக்கிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் நடந்த மதுபான கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments