ஹோட்டலில் உணவருந்திவிட்டு பணம் கொடுக்காமல் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது

0 2939

உளுந்தூர்பேட்டையில் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தி விட்டு பணம் கொடுக்காமல் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிசிடிவி காட்சிகளை வைத்து இந்து முன்னணி அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை- சேலம் புறவழி சாலையில் செயல்பட்டு வரும் ஹோட்டலுக்கு மது போதையில் சென்ற மூவர், உணவு அருந்திவிட்டு பணம் கொடுக்கும் நேரத்தில் உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகக் கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

தகவலறிந்து விரைந்த உளுந்தூர்பேட்டை போலீசார், ஹோட்டலில் தகராறு செய்த மூவரை கைது செய்தனர். இதுதொடர்பாக கேட்டபோது, தான் போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என இந்து முன்னணி அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments