பாண்டி பஜாரில் உள்ள போலீஸ் பூத்தை அடித்து உடைத்த மர்மநபர்கள்..!

0 3014

சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறைக்கு சொந்தமான பூத்தை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாம்பலம் ஜி.என் செட்டி சாலையில் மழை நீர் வடிகால் பணி நடந்து வரும் நிலையில், நேற்றிரவு அங்கு இரும்பு கம்பியை திருட ஆட்டோவில் வந்த சிலரை பிடித்து மேஸ்திரி லோகநாதன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மேஸ்திரி லோக நாதனை கை மற்றும் காலில் குத்தியதில் காயம் ஏற்பட்டது.

மேலும், அந்த நபர்கள் அருகிலிருந்த பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறைக்கு சொந்தமான பூத்தை கல்லால் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments