பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? - நாளை மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 2582

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் அக்கட்சியை சேர்ந்த சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளி ரிஷி சுனிக் இடையே போட்டி நிலவியது. புதிய பிரதமர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் இரவு 12.30 மணியளவில் பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் முறைப்படி அறிவிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments