செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி - 2 பேர் கைது..!

0 3933
செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி - 2 பேர் கைது..!

சென்னையில் செல்போன் செயலி மூலம் நூதன முறையில் 56 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சாட்கரோ செல்போன் செயலி மூலம் அறிமுகமான சியாமளா என்ற பெண்ணுடன் தான் பேசி வந்ததாகவும், வாட்ஸ் அப் மூலம் பேசி நன்கு பழகிய பிறகு அப்பெண் வேலை பார்க்கும் சாப்ட்வேர் கம்பெனியில் கேண்டீன் நடத்த அனுமதி பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன் எண்களின் அழைப்புகள் குறித்த விவரப்பதிவை ஆய்வு மேற்கொண்டு, கோவா விரைந்த தனிப்படை போலீசார், சியாமளா என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட பிரியாவையும், அவரது மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட சக்திவேல் என்பவரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments