கடன் வாங்கித் தருவதாக மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றிய நபர் குண்டர் சட்டத்தில் கைது..!

0 2467
கடன் வாங்கித் தருவதாக மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றிய நபர் குண்டர் சட்டத்தில் கைது..!

சென்னையில் 200கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 15கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிரபல மோசடி மன்னன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லயன் முத்துவேல் என்பவர் B.M.ரெட்டி, முத்துகிருஷ்ணா மற்றும் முத்து என்று தனது பெயர்களை மாற்றி மாற்றி எழுதி மோசடியில் ஈடுபடுவது வழக்கமாகும்.

இவர் மதுரையில் உள்ள சேது பொறியியல் கல்லூரியினை நடத்தி வரும் முகமது ஜலீல் என்பவரிடம் கல்லூரி அபிவிருத்திக்காக 200 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷனாக 5கோடியே 46 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கூறி பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால் சொன்னபடி கடன் வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றியதால் முத்துவேல் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு,போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேல் உள்பட 2பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்மீது 10க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் இருப்பதும், 15கோடி ரூபாய்க்கும் மேல் ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது.

அவர் வைத்திருந்த 120 சவரன் தங்க நகைகள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் மோசடி பணத்தில் கட்டியுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் என 15 அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகளையும் முடக்கினர்.

இது குறித்த ஆதாரங்களை சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் அமலாக்க துறைக்கும் போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments