சென்னையில் கை, கால்களை கட்டி தொழிலதிபரின் சடலத்தை தூக்கி வீசிய மர்ம கும்பல்..!

0 3167

சென்னை விருகம்பாக்கம் அருகே, தொழிலதிபரை கடத்திக் கொலை செய்துவிட்டு சடலத்தை கை, கால்களைக் கட்டி பிளாஸ்டிக் கவரில் சுருட்டி வீசிய மர்ம கும்பலை 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கட்டுமான தொழில் செய்து வரும் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயதான பாஸ்கரன் என்பவர் நேற்று மாலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட நிலையில் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாஸ்கரனின் மகன் ஆதம்பாக்கம் போலீசில் புகாரளித்துள்ளார்.

இதனிடையே, சின்மயா நகர் ஆற்றுப்பாலம் அருகே பாலிதீன் கவரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்ததில், அது காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பாஸ்கரன் என்பது தெரியவந்தது.

நேற்று முதல் இன்று காலை வரை பாஸ்கரனின் ஏ.டி.எம் கார்டில் இருந்து லட்சக்கணக்கில் படம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ள நிலையில், அவர் பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments