போராட்டங்களின் போது கூட்டத்தைக் கலைக்கும் வகையில், வானில் இருந்து கண்ணீர் புகை குண்டு வீச தயாராகும் டிரோன்கள்

0 2655

சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கவும், போராட்டங்களின் போது கூட்டத்தைக் கலைக்கவும் வானில் இருந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் டிரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பயிற்சி மையம் தயாரித்து காவல்துறையினருக்கு வழங்கி வருகிறது.

மத்தியப் பிரதேசம் டெகன்புர் பகுதியில் இந்த வகை டிரோன்களுக்கான பரிசோதனை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

ஹெலிகாப்டரில் கட்டப்பட்ட ஆறு டிரோன்களில் கண்ணீர் புகைக் குண்டுகள் ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டன. குறிப்பிட்ட இலக்குகளுக்குச் சென்று அந்த டிரோன்கள் ஏவப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments