கண்ணில் மிளகாய்பொடி தூவி ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகை கொள்ளை.. பேடிஎம் பரிவர்த்தனையால் சிக்கிய 3 பேர்..!

0 2976
கண்ணில் மிளகாய்பொடி தூவி ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகை கொள்ளை.. பேடிஎம் பரிவர்த்தனையால் சிக்கிய 3 பேர்..!

டெல்லியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை 100 ரூபாய் பேடிஎம் பரிவர்த்தனையை அடிப்படையாக கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

பஹார்கஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்த 2 நபர்களின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, தங்க-வெள்ளி நகைகள் போன்றவற்றை போலீஸ் உடையணிந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில், கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனையிட்டு, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான சுற்றித் திரிந்த 4 பேரை அடையாளம் கண்டனர்.

அவர்களில் ஒருவன் அங்கிருந்த டாக்சி ஓட்டுநருக்கு 100 ரூபாய் பேடிஎம் மூலம் அனுப்பி, அதற்கான தொகையை ரொக்கமாக பெற்றுள்ளான்.

இந்த பேடிஎம் பரிவர்த்தனையை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. உடனடியாக ஜெய்ப்பூருக்கு விரைந்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments