பாஜகவுடன் இணைந்த 5 ஐக்கிய ஜனதளம் எம்.எல்.ஏக்கள்..!

0 3708

மணிப்பூரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் 5 பேர் ஆளும் பாஜகவுடன் இணைந்து விட்டனர். இது குறித்து தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏக்களில் 5 எம்.எல்,ஏக்கள் பாஜகவுடன் இணைந்து விட்டதை சபாநாயகர் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 32 இடங்கள் கிடைத்தன. 5 எம்.எல்.ஏக்கள் இணைந்ததால் அதன் பலம் மேலும் கூடியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments