ஒரே பெண்ணை 2வது திருமணம்.. கோமாளி 'புகழ்' மணக்குது.. பகுத்தறிவுக்கு வந்த சோதனை..!

0 37068
ஒரே பெண்ணை 2வது திருமணம்.. கோமாளி ' புகழ்' மணக்குது.. பகுத்தறிவுக்கு வந்த சோதனை..!

குக் வித் கோமாளி’ புகழ் தனது காதலியை ஒரு வருடத்திற்கு முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட நிலையில், குடும்பத்தினர் புடைசூழ விநாயகர் கோவிலில் வைத்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான புகழ் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியான கோவை போத்தனூரை சேர்ந்த பென்சியை, கடலூர் விநாயகர் கோவிலில் வைத்து வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்தினர் சுற்றமும் நட்பும் வாழ்த்த திருமணம் செய்து கொண்ட நிலையில் சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவரையும் அழைத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே புகழ் - பென்சி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டே கோவை பெரியார் படிப்பகத்தில் வைத்து சுயமரியாதை முறைப்படி பதிவு திருமணம் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இந்த காதல் ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு பெரியார் படிப்பகத்தில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்த காதலியை தற்போது 2வது முறையாக கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து உறவினர்களை திருப்தி படுத்தியதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments