கோவளத்தில் பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

0 2272
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல குழுவின் கூட்டம் நாளை கோவளத்தில் நடைபெற உள்ளது.

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க கேரளா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயனை சந்தித்து, இரு மாநிலங்களுக்கும் பயன் அளிக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments