ஓடும் பள்ளிப் பேருந்தில் இருந்து கீழே விழுந்த 2 ஆம் வகுப்பு மாணவி..! பதை பதைக்க வைக்கும் காட்சி.!

0 2614

சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளிப்பேருந்தில் இருந்து 2 ஆம் வகுப்பு மாணவி தவறி விழுந்த சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. பின்னால் வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கேரளாவின் அலுவ நகரில் பள்ளி முடிந்து குழந்தைகள் பேருந்தில் வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தபோது பள்ளி பேருந்தில் இருந்து மாணவி ஒருவர் சாலையில் விழுந்தார்

இதை கவனித்த முதியவர் உள்ளிட்டோர் ஓடிச்சென்று கத்தி கூச்சலிட்டு பின்னால் வந்த மற்றொரு பேருந்தை தடுத்து நிறுத்தி சிறுமியின் உயிரை காப்பாற்றினார்.

பேருந்தின் பின் இருக்கையில் 2-ம் வகுப்பு மாணவியான அந்த சிறுமி அமர்ந்திருந்த நிலையில் பேருந்தின் பின்புறமுள்ள எமர்ஜென்சி எக்சிட் தானாக திறந்து கொண்டதால் , மாணவி இருக்கையில் இருந்து தவறி சாலையில் விழுந்தது தெரியவந்தது. சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை அதே பேருந்திலேயே வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

பள்ளி நிர்வாகத்தினர் இதனை மறைத்த நிலையில் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்தது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments