தேர்தல் முறைகேடு : மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை..

0 2422
தேர்தலில் முறைகேடு என இராணுவம் குற்றம்சாட்டும் வழக்கில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தலில் முறைகேடு என இராணுவம் குற்றம்சாட்டும் வழக்கில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. அரசின் ஆலோசகராக ஆங் சான் சூகி பதவி வகித்தார்.

தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் கூறி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

4 வழக்குகளில் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முறைகேடு வழக்கில் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments