அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் உறுப்பினர் பதவி பெற்று தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி - போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது..!

0 2196
அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் உறுப்பினர் பதவி பெற்று தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி - போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது..!

அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை போரூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையின் மருத்துவரான செல்வகுமார் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான சேலத்தைச் சேர்ந்த சசிகுமார், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாம் என ஆசை வார்த்தை கூறி பல தவணைகளாக பணம் பெற்று, ஏமாற்றியதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments