பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் டானிக்குகள் விற்பனை - 5 பேர் கைது..!

0 2206
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் டானிக்குகள் விற்பனை - 5 பேர் கைது..!

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை தரக்கூடிய மாத்திரை மற்றும் டானிக்குகளை விற்பனை செய்து வந்த போலி மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேளச்சேரி போலீசார் நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த  பையை சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் டானிக்குகள் இருப்பதைக் கண்டு பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மருந்து பொருட்கள் விற்பனையாளர்கள் போல் வலம் வந்து போதை மாத்திரைகளை கொடுங்கையூரில் இருந்து வாங்கி வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments