சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனை செய்வதை நிறுத்த அமெரிக்கா உத்தரவு.!

0 2658

சீனாவுக்கு செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்வதை நிறுத்தி வைக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு  அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னணி அமெரிக்க நிறுவனங்களான என்விடியா மற்றும் AMD நிறுவனங்கள், இயந்திரங்களின் கற்றல் திறனை வேகப்படுத்தும் சிப்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்த உத்தரவால் அந்நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 3 சதவீதம் சரிவை கண்டுள்ளன.

மேலும்,  A100 மற்றும் H100 chips விற்பனை தடையால், 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தடையால், சீன நிறுவனங்களால் குறைந்த செலவில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப ரீதியிலான பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments