சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.96 குறைப்பு..!

0 2494

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 96 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 2 ஆயிரத்து 141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 5 மாதங்களில் 5வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் ஆயிரத்து 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments