தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சத்தான உணவு, பழவகைகள், சர்க்கரை பொங்கல், கொண்டை கடலை வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் 65 கிலோ எடை கொண்ட லட்டு மற்றும் 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலை உள்ளிட்டவைகளோடு விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிங்கமுகம் வாகன விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஜெய விஜய கணபதி ஆலயத்தில் அருகம்புல்லால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பொதுமக்கள் பயபக்தியுடன் வழிபட்டனர்.
சென்னை மணலி புதுநகரில் இந்து முன்னணி சார்பில் 15 அடி உயரம் கொண்ட 5ஆயிரம் வாழைப்பூவால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருப்புறம்பயம் சாட்சிநாத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெற்றது.
Comments