என்ஜின் தீ விபத்து காரணமாக சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை!

0 2692

சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை விதித்ததையடுத்து அதைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்திடம் 400 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்த ஹெலிகாப்டர்களில் தொடர்ந்து என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதனைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிடம் 15 சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஹெலிகாப்டர்களை தயாரித்த அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் சினூக் ஹெலிகாப்டர்களின் சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு விவரங்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments