ஸ்கெட்ச் பென்சில் மற்றும் ஜாமெட்ரி பாக்ஸ் கொண்டு அமைக்கப்பட்ட 18 அடி உயர விநாயகர் சிலை!

0 2569

சென்னையை அடுத்த மணலி அருகே பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஸ்கெட்ச் பென்சில் மற்றும் ஜாமெட்ரி பாக்ஸ் கொண்டு அமைக்கப்பட்ட 18 அடி உயர கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மணலியை அடுத்த சின்ன சேக்காடு, காந்திநகர் பகுதியில் சர்வ மங்கள விநாயகர் கோயில் நிர்வாகம் சார்பில் 35,000 ஸ்கெட்ச் பென்சில் மற்றும் 800 ஜாமெட்ரி பாக்ஸ் கொண்டு 18 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் பூஜைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஸ்கெட்ச் பென்சில் மற்றும் ஜாமெட்ரி பாக்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments