அதிமுக தலைமை கழக கலவர வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்காக டிஎஸ்பி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு நியமனம்!

0 2135

அதிமுக தலைமை கழக கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஆதிராஜாராம்,  உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி, ஓபிஎஸ்.ஆதரவாளர் பாபு ஆகியோர் கொடுத்த புகாரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் ஓ.பி.எஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிபிசிஐடியின் விசாரணைக்காக டிஎஸ்பி  வெங்கடேசன் தலைமையில் நான்கு காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments