ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேறுவழியின்றி, ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பித்த பெண்..!

0 4331
ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேறுவழியின்றி, ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பித்த பெண்..!

கோயம்புத்தூரில், நள்ளிரவில் rapido ஆட்டோ-வில் தனியாக சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூரில் பணியாற்றிவந்த அந்த பெண் திருப்பூரிலிருந்து பேருந்து மூலம்  நள்ளிரவு 12:30 மணியளவில் கோயம்புத்தூர் வந்துள்ளார்.

Rapido செயலியில் ஆட்டோ புக் செய்து வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆட்டோவை நிறுத்த கூறியும், ஓட்டுநர் நிறுத்தாததால் ஆட்டோவிலிருந்து அந்தப்பெண் வெளியே குதித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது சாதீக் என்ற அந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments