போக்குவரத்து காவலர்கள் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த பயோமெட்ரிக் வசதி கொண்ட செயலி..!

0 3009
போக்குவரத்து காவலர்கள் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த பயோமெட்ரிக் வசதி கொண்ட செயலி..!

சென்னையில் குறித்த நேரத்தில் போக்குவரத்து காவலர்கள் பணிக்கு வருவதை உறுதிப்படுத்தவும், எந்தந்த பகுதியில் பணியில் உள்ளனர் என்பதை கண்காணிக்கவும் பயோமெட்ரிக் வசதி கொண்ட செயலியை போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

நகரில் பெரும்பாலான போக்குவரத்து சந்திப்புகளில் அலுவலக நேரங்களில் காவலர்கள் பணியில் இருப்பதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் காவலர்கள் அதனை சரி செய்கிறார்களா? என்பதையும் செயலி வாயிலாக அதிகாரிகள் கண்காணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments