ஸ்ரீமதி தாய் செல்வியின் தீரா சந்தேகத்திற்கு நீதிபதி சொன்ன தீர்வு..! தாயின் அடுத்த கட்ட முடிவு..!

0 6236
ஸ்ரீமதி தாய் செல்வியின் தீரா சந்தேகத்திற்கு நீதிபதி சொன்ன தீர்வு..! தாயின் அடுத்த கட்ட முடிவு..!

ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக தாய் செல்வியின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஜிப்மர் ஆய்வறிக்கை மூலம் நீதிமன்றம் விளக்கம் அளித்த நிலையில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தாய் செல்வி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவாகாரத்தில் தங்கள் மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மாணவியின் தாய் செல்வி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

முதல் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் , 2வது பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என்ற முடிவே வந்திருந்தாலும், செல்வியின் தரப்பு 2 வது பிணகூறாய்வு அறிக்கையில் மாணவியின் வலது பக்க நெஞ்சு பகுதியில் புதிதாக இரு காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதனை ஏற்க மறுத்தனர்.

இதனால் 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவ குழுவினரை கொண்டு வீடியோ பதிவு மற்றும் இரு பிணக்கூறாய்வு அறிக்கைகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திங்கட் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவ குழுவினரின்ஆய்வு அறிக்கையின் படி மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலையோ பலாத்காரமோ காரணமில்லை என்றும் தற்கொலை என்று நீதிபதி ஜேகே இளந்திரயன் தெரிவித்தார்.

3 வது மாடியில் இருந்து குதித்த போது மரக்கிளைகள் மீது உராய்ந்து ஏற்பட்ட காயங்களே ஸ்ரீமதி உடலில் உள்ளதாகவும், வலது பக்க மார்பில் உள்ள காயமும் அப்படி ஏற்பட்டதுதான்.

அந்த காயங்களால் ஏற்பட்ட ரத்த கசிவுகளே அவரது ஆடையின் உள்பக்கம் படிந்திருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவியின் அந்தரங்க உறுப்புகளில் எந்த ஒரு காயமும் இல்லை என்றும் ஜிப்மர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

அந்த கடிதத்தில் இருப்பது ஸ்ரீமதியின் கையெழுத்து தான் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆசிரியைகள் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக கடிதத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடாததாலும், படிக்க சொன்னதால் உயிரை மாய்த்துக் கொள்வது வேதனைக்குறியது என்றும் மாணவியின் தற்கொலைக்கு வருத்தம் தெரிவித்ததோடு இந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்ததே தவறு என்றும் நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்

மாணவி ஸ்ரீமதியை அவரது பெற்றோர் , சக்தி மெட்ரிக் பள்ளியின் விடுதியில் தங்கி படிப்பதற்கு கட்டாயப்படுத்தியதாகவும், மாணவி ஸ்ரீமதிக்கு வேதியியல் பாடத்தை படிப்பதில் கஷ்டங்கள் இருந்துள்ளது என்பது, அவருடன் படித்த 2 மாணவிகளின் வாக்கு மூலத்தின் படி தெரியவந்துள்ளதாக நீதி பதி தெரிவித்தார்.

சம்பவத்தன்று வகுப்பறையில் நைட்ரிக் அமிலத்தின் பார்முலாவை எழுத சொன்னதற்கு தெரியாமல் விழித்த ஸ்ரீமதியை வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா படிப்பதற்கு அறிவுறுத்தியதை குற்றமாக கருத முடியாது என்று நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

3 வது மாடியில் ரத்தக்கரை இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அது ரசாயண கலவை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். கேரளாவில் நடந்த சம்பவம் ஒன்றில் உச்ச நீதிம்ன்றம் வழங்கிய உத்தரவை சுட்டிக்காட்டி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதி பதி உத்தரவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்

ஸ்ரீமதியின் தாய் எழுப்பிய சந்தேகங்களுக்கு நீதிபதி ஜே.கே.இளந்திரயன், ஜாமீன் தொடர்பான விரிவான உத்தரவில் விளக்கமளித்த நிலையில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்வழங்கப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீமதியின் தாய் செல்வி , உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments