உணவகத்தில், பெண்களை சரமாரியாகத் தாக்கிய கும்பல் - 28 பேர் கைது

0 3366
உணவகத்தில், பெண்களை சரமாரியாகத் தாக்கிய கும்பல் - 28 பேர் கைது

சீனாவில் உள்ள உணவகத்தில், பெண்களை கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 10-ந் தேதி அதிகாலை டாங்ஷன் நகர உணவகத்தில் 4 பெண்கள் உணவருந்திகொண்டிருந்தனர். அப்போது பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது.

அவர்களைச் சேர்ந்த ஒருவன், பாலியல் தொல்லை அளித்ததை அந்த பெண்கள் கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவனது கூட்டாளிகள், அந்த பெண்களை முடியை பிடித்து இழுத்துச் சென்று பாட்டில்களால் சரமாரியாகத் தாக்கி, கால்களால் எட்டி உதைத்தனர்.

இணையத்தில் வைரலான அந்த சிசிடிவி காட்சிகள் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த கும்பலை சேர்ந்த 28 பேரும், லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களை காப்பாற்ற முயன்ற 8 போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments