பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு..!

0 2691
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு, சிந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

செஹ்வான் நகரில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்டோரை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்ற போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர் கனமழையால் பாகிஸ்தானின் சிந்து, பலூசிஸ்தான் மாகாணங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், லட்சக் கணக்கான மக்கள் வீடுகள் விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments