கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பாகிஸ்தான்.. 1,136 பேர் உயிரிழப்பு - 3.30 கோடி பேர் பாதிப்பு..!

கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பாகிஸ்தான்.. 1,136 பேர் உயிரிழப்பு - 3.30 கோடி பேர் பாதிப்பு..!
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் காய்கறி விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், இந்தியாவில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய எல்லைப்பாதையை திறந்து விடுவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில் நிவாரணப் பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
முதல்முறையாக கடற்படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தக்காளி கிலோ 180 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 140 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த காய்கறிகளுக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments