மதுபோதையில் முதலமைச்சரின் வாகனம் முன்பு ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது.!

0 3644

சென்னை மெரினா காமராஜர் சாலையில் முதலமைச்சரின் வாகனம் வரும் போது மதுபோதையில் ஸ்டண்ட் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டையைச் சேர்ந்த சுஜய் என்ற இளைஞர், நேற்றிரவு முதலமைச்சர் வாகனத்தின் முன்னால் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச் சென்றதோடு, திடீரென கான்வாயின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து சுஜய்-ஐ கைது செய்து, மனித உயிருக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments