பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவன் தவறி கீழே விழுந்து காயம்.!

0 2946

செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 9ஆம் வகுப்பு மாணவன் தவறி கீழே விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

செய்யூரில் இருந்து அச்சரப்பாக்கம் வரை செல்லும் தடம் எண் 19 பேருந்தில், ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை பின்னால் வந்த வாகன ஓட்டி வீடியோ பதிவு செய்த நிலையில், திடீரென பேருந்தில் இருந்து ஒரு மாணவன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மாணவன் உயிர் தப்பிய நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments