ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்று தனது இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த நபர்.. எல்லாத்துலயும் அவசரம்.!

0 3834

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா நகரில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் தனது இருசக்கர வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடியதால் கடைசி நிமிடத்தில் உயிர் தப்பினார்.

பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அந்த நபர், தான் நிற்கும் தண்டவாளத்தில் அதிவேகமாக ரயில் வருவதை பார்த்ததும், பைக்கை திருப்ப முயன்றார். ஆனால், அவசரத்தில் அவரது பைக் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.

அதனை மீட்க அந்த நபர் முயற்சிக்கையில், அதற்குள் எக்ஸ்பிரஸ் ரெயில் நெருங்கி விடவே, கடைசி நிமிடத்தில் பைக்கை கைவிட்டு விலகி ஓடியதால், அந்த நபர் உயிர் தப்பினார். ஆனால், ரெயில் வேகமாக மோதியதில், அவரது பைக் சுக்கு நூறாக நொறுங்கிப்போனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments