கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு?

0 2873

கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்முறையோ, கொலையோ காரணம் அல்ல என்று நேற்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஸ்ரீமதியை நன்றாக படிக்கச் சொன்னதற்காக ஆசிரியர்கள் சிறையில் வாடுவது துரதிர்ஷ்டமானது என்றும் மாணவர்களை படிக்குமாறு கூறுவது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதி பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், கணியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments