ஆந்திராவுக்கு கொடுக்க வேண்டிய மின்பாக்கியை தெலுங்கானா அரசு ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் - மத்திய அரசு

0 2525

ஆந்திராவுக்கு 6,756 கோடி ரூபாய் மின்பாக்கியை தெலுங்கானா அரசு ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அணுமின் நிலையம், காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களுக்கு ஆந்திரா வழங்கி வரும் நிலையில், தெலங்கானா அரசு கடந்த ஜூலை மாதம் வரை 3,441 கோடி ரூபாயை மின்பாக்கியாக வைத்துள்ளதாகவும், இதற்கு 3,315 கோடி வட்டி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் நேரில் சந்தித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments