சிஎம்சி மருத்துவமனையின் நேர்முக தேர்வுக்கு சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அதே மருத்துவமனையில் அனுமதி.!

0 2798

வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் நேர்முக தேர்வுக்கு சென்ற இளம்பெண், வழியில் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் , அதே சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

மதுரையை அடுத்த அச்சம்பத்து பகுதியை சேர்ந்த 22 வயது சகுந்தலாதேவி, வேலூர் சிம்சி மருத்துவமனையின்  நேர்முகத் தேர்வில் கலந்துக்கொள்வதற்காக தனது பெரியப்பா, பெரியம்மா மற்றும் தனது அண்ணனுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, விழுப்புரம் மாவட்டம் அருள்நாடு என்ற இடத்தில் எதிரே வந்த லாரியுடன் அவர்களது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் சகுந்தலாதேவியுடன் சென்ற மூவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் சகுந்தலா தேவி, தான் நேர்முக தேர்வுக்கு சென்ற அதே சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments