விளையாட்டு வீரர்களுடன் வாலிபாலை உற்சாகமாக விளையாடும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்.!

0 2168

பஞ்சாப் முதலமைச்சர் Bhagwant Mann விளையாட்டு வீரர்களுடன் வாலிபால் விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. ஜலந்தரில் உள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டு மைதானத்தில் ‘Khedan Watan Punjab Dian' என்ற மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி துவக்க விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பகவந்த் மான் போட்டியை தொடக்கி வைத்தார். பின்னர் உடை மாற்றிக் கொண்டு வந்த அவர் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுடன் உற்சாகமாக வாலிபால் விளையாடினார்.

பின்னர் பேசிய பகவந்த் மான், மாநில அளவில் 28 விளையாட்டுப் பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் ஆறு வயதுப் பிரிவுகளில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 6 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments