முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி தான்யாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர்.!

0 3124

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆவடியை சேர்ந்த சிறுமி தான்யாவை தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் சிறுமியிடம் முதலமைச்சர் தெரிவித்தார். விரைவில் பள்ளிக்கு செல்லலாம் என்று தெரிவித்த முதலமைச்சர், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும் முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments