காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு.. தங்கை பயணம் செய்த வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த அண்ணன் கைது.!

0 6900

தேனி மாவட்டம் சின்னமனூரில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கை பயணம் செய்த வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டார்.

சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்த மல்லிகா என்ற இளம்பெண் தாய்மாமன் மகனான தினேஷ்குமாரை பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று காதல் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு கார் மூலம் சின்னமனூர் காவல்நிலையம் சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த மல்லிகாவின் அண்ணன் நல்லபெருமாள் ஆத்திரத்துடன் விரைந்து வந்து காவல்நிலையம் முன்பு நின்றிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments