ரபேல் விமான வழக்கு.. மீண்டும் மீண்டும் முடிந்து போன வழக்கை விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

0 2654

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்ததை அடுத்து, மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார்.

36 ரபேல் போர் விமானங்கள் வாங்க கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்ததை அடுத்து மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments