வங்கிகளில் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி.. முக்கிய குற்றவாளி கைது.!

0 2196

வங்கிகளில் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலின் முக்கிய குற்றவாளியை மயிலாடுதுறையில் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையை சேர்ந்த மணிகண்டன் என்பரிடம் சென்னையில் உள்ள பிரபல பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறி தனிநபர் கடன் பெற கட்டணங்கள் பெற்றுவிட்டு ஏமாற்றிதாக அளிக்கப்பட்ட புகாரில் 3 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது அமர்நாத்தை போலீசார் கைதுசெய்தனர்.

மோசடி கும்பலிடமிருந்து 15 க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப், 25 க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments