நாகை பண்ணார பரமேஸ்வர கோயிலில் இருந்து திருடப்பட்ட 11 சிலைகள் 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!

0 2692
நாகை பண்ணார பரமேஸ்வர கோயிலில் இருந்து திருடப்பட்ட 11 சிலைகள் 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!

நாகப்பட்டினம் மாவட்டம் பண்ணார பரமேஸ்வர கோயிலில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட இரு வெண்கல உலோக சிலைகள், அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கோயிலில் இருந்து மொத்தம் 11 சிலைகள் திருடு போனது தெரியவந்தது.

தொடர்ந்து பாண்டிச்சேரி ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்ற புகைப்படங்களை கொண்டு விநாயகர், தேவி சிலைகள், நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள அருங்காட்சியகளில் இருப்பதை கண்டறிந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments