சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை முடிக்க இறுதியாக, மேலும் 4 மாதகால அவகாசம் - மதுரை உயர்நீதிமன்ற கிளை

0 2030
சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை முடிக்க இறுதியாக, மேலும் 4 மாதகால அவகாசம் - மதுரை உயர்நீதிமன்ற கிளை

சாத்தான் குளத்தில் தந்தை ஜெயராஜ்-மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை, விரைந்து விசாரித்து முடிக்க, இறுதியாக மேலும் 4 மாத கால அவகாசத்தை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, வழக்கை விரைவாக முடிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிமன்றம் சார்பில், மேலும் 4 மாத கால அவகாரம் கோரப்பட்டது.

குற்றவாளிகளாக கருதப்படும் 9 நபர்களின் வழக்கறிஞர்கள் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதால், காலதாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இறுதி தடவையாக மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments