சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் விடுதி வரவேற்பறை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - முன்னாள் ஊழியர் கைது..!

0 2417
சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் விடுதி வரவேற்பறை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - முன்னாள் ஊழியர் கைது..!

சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் விடுதியின் வரவேற்பறையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வடபழனியில்  தமீம் அன்சாரி என்பவர் நடத்தி வரும் எம்.ஆர்.எம் ரெசிடெண்ட்ஸ் என்ற தங்கும் விடுதிக்கு, கடந்த 26ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

புகாரின்பேரில், சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் வினோத் விடுதியில் 4 வருடமாக பணியாற்றியதும், தமீம் அன்சாரி உடனான முன்விரோதம் காரணமாக நண்பருடன் இணைந்து விடுதி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி சென்றதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments