கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடும் மழையால் மண்சரிவு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

0 3541

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குடையாத்தூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

தொடுபுழா அருகே உள்ள குடையாத்தூரில் நேற்றிரவு பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான சோமன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மண்சரிவில் சிக்கினர்.

இதில் சோமனின் மனைவி சீமா,தாயார் தங்கம்மா மற்றும் பேரன் ஆதிதேவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மீதமுள்ள மூன்று பேரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments