ஆட்டோ மெக்கானிக் அரிவாளால் வெட்டி படுகொலை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

0 3147

மதுரையில் ஆட்டோ மெக்கானிக்கை அரிவாளால் வெட்டி கொலை செய்த 6பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச்  சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று மாலை வழக்கம் போல் வீட்டு வாசலில் செல்போனில் விளையாடி கொண்டிருந்த போது அங்கு வந்த நண்பர் ஆசிப் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தடுக்க வந்த பிரகாஷின் சித்திக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments