ராசிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் அவதி!

0 2583

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.

ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனழை பெய்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகளை வேறு இடத்திற்கு ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

தொடர் மழையின் காரணமாக காய்கறி கடைகளில் இருந்த காய்க்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்த நிலையில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments