8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது.!

0 3716

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஆரோக்கியராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி பெற்றோரிடம் பள்ளியில் நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இதனை அடுத்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments