ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா..!

0 3633

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் விளையாட பணித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்தியத் தரப்பில் விராட் கோலி 35ரன்களும், ஜடேஜா 35 ரன்களும், ஹர்திக் பாண்டியா 33ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சிறப்பான ஆட்டம், அபார திறமையை வெளிப்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments