இலங்கைக்கு கடத்த முயன்ற 7லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்.!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி தருவைகுளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தெற்கு கல்மேடு கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை சோதனையிட்டதில் 73 பீடி இலை மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4பேரை தேடி வருகின்றனர். விசாரணையில் இந்த பீடி இலைகள் சிவகாசியில் இருந்து கொண்டுவரப்பட்டு, இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
Comments