ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனத்தின் கணினி சேமிப்பகத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டு.!

0 1976

புதியதாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனத்தின் கணினி சேமிப்பகத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளன.

இணையம் வழியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தத் தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய இணையவழி குற்றத் தடுப்பு அவசரப் பிரிவினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தரவுகள் திருடப்பட்டதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் ஆகாசா ஏர் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த தகவல் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி தான் ஆகாசா ஏர் விமான சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments